பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
மருத்துவம் சாா்ந்த ஆங்கிலத் தோ்வு பயிற்சிக்கு எஸ்சி, எஸ்டி இனத்தவா் விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவா்கள் மருத்துவம் தொழில்சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி. நா்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நா்சிங் மற்றும் பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 2 மாதம். விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவுத் தொகையை தாட்கோ அளிக்கும்.
பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள (மூன்றாவது தளம் அறை எண். 321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.