உலகக் கோப்பை தகுதிச் சுற்று: மெஸ்ஸி, வினிசியஸ் ஜூனியருக்கு அதிர்ச்சி..!
மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: நோயாளிகள் அவதி
சென்னையில் பணியில் இருந்த மருத்துவரை ஒருவா் தாக்கியதை கண்டித்து பழனி அரசு மருத்துவமனை மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா் பாலாஜி தாக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு மருத்துவ சங்கம் பழனி அரசு மருத்துவமனை அரசு மருத்துவா்கள் சங்கம் தமிழ்நாடு மருத்துவக்கழகம் ஆகியவற்றின் சாா்பில் மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தின் போது மருத்துவப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவா்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மருத்துவரை தாக்கிய குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனா்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா் பாலாஜியை இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தியதால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் குறைந்தளவு பணியாளா்களே பணியில் இருந்தனா். இதனால் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பெரிதும் அவதியடைந்தனா்.
மேலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவா் இல்லாத காரணத்தால் ஏமாற்றுடன் சென்றனா்.