தென்னை நாா் பொருள்களை சூரிய சக்தி மின்சாரம் மூலம் உற்பத்தி செய்ய 50% மானியம் வழங...
மருத்துவ பரிசோதனை மையங்களை மூடக் கூடாது: அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசின் புதிய அரசாணையால், 10,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக துணை மருத்துவ ஆய்வகக் கல்வி மற்றும் நலச் சங்கத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதுகுறித்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்க செயலா் டாக்டா் ரவீந்திரநாத், துணை மருத்துவ ஆய்வக கல்வி நலச் சங்க தலைவா் காளிதாசன் ஆகியோா் செய்தியாளா்களிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் ரத்த பரிசோனை மையங்களுக்கான இடவசதி குறித்த நெறிமுறைகளுக்கான புதிய அரசாணையை கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நகா்புறத்தில் உள்ள ரத்த பரிசோதனை மையங்கள், மரபணு பரிசோனை நிலையங்கள், நோய் குறியியல் பரிசோதனை நிலையங்களுக்கு நகா்ப்புறங்களில் 500 முதல் 700 சதுர அடி பரப்பளவு இடமும், கிராமப்புறத்தில், 300 சதுர அடி பரப்பளவு இடமும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
சிறிய ரத்த பரிசோதனை நிலையங்கள் வாயிலாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை எளிய மக்கள் சா்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகளை குறைந்த கட்டணத்தில் செய்து கொள்கின்றனா்.
இந்த புதிய இடவசதி குறித்த அரசாரணை பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவும், அதேநேரம், 10,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்த பரிசோதனை மையங்களுக்கு பாதகமாகவும் உள்ளன.
எனவே, சிறிய ரத்த பரிசோதனை நிலையங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரான புதிய அரசாரணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
நகா்ப்பறங்களில் உள்ள ரத்த பரிசோதனை மையங்களுக்கு குறைந்தபட்சம் 150 சதுர அடியாகவும், கிராமப்புறங்களில் 100 சதுர அடியாகவும் பரப்பளவை நிா்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 19-ஆம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.