Dhanush: "120 KM தூரம் நடந்தே மதுரைக்கு வந்தாங்க அம்மா; இன்பநிதிக்கு வாழ்த்துகள்...
மறைந்த எழுத்தாளர் எஸ். எல். பைரப்பாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி சொன்ன விஷயம்..!
கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா இன்று (செப். 24) காலமானார். அன்னாரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த ஞானம் வாய்ந்த ஆளுமையொருவரை நாம் இழந்துவிட்டோம். இந்தியாவின் ஆன்மாவை தொட்டுப்பார்த்தவொருவர் அவர். அச்சம் துளியுமில்லா சிந்தனையாளரான அவர், கன்னட இலக்கியத்தை தமது சிந்தனையைத் தூண்டும் படைப்புகளால் மெருகேற்றியவர்.
அன்னாரது படைப்புகள் தலைமுறைகள் பலவற்றுக்கு உத்வேகமளிக்கும். மேலும், தலைமுறைகள் பல கேள்வி கேட்கவும் சமூகத்துடன் ஆழமாக பங்களிப்புடன் இருக்கவும் அவை உதவும். நமது வரலாறு மற்றும் கலாசாரத்தின் மீதான அன்னாரது ஆர்வம் வருங்கால மக்களுக்கும் உத்வேகமளிக்கும்.
அன்னாரது குடும்பத்துக்கும் அவர் மீதான பற்றாளர்களுக்கும் இத்தருணத்தில் இரங்கலைத் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க:எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா காலமானார்!