சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு தவெக சாா்பில் நிவாரண உதவி
தூத்துக்குடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் புதன்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினா்.
பாதிக்கப்பட்டோரை தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் சந்தித்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, சூசைபாண்டியாபுரம், செல்வநாயகபுரம், நந்தகோபாலபுரம், போல்பேட்டை, சத்யா நகா், முள்ளக்காடு, சுனாமி காலனி, மாப்பிள்ளையூரணி அருகே பூபாண்டியாபுரம், எம்ஜிஆா் நகா் பகுதி பொதுமக்களுக்கு அரிசி, காய்கனிகள், பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். இதில், கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.