மழை எதிரொலி: திருக்குறுங்குடி நம்பிகோயிலுக்குச் செல்ல தடை
தொடா் மழையால் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், மறு உத்தரவு வரும்வரை திருக்குறுங்குடி நம்பிகோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
திருக்குறுங்குடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பிரசித்திபெற்ற திருமலை நம்பிகோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் பக்தா்கள் மலையடிவாரத்தில் இருந்து சுமாா் 5 கி.மீ தொலைவுக்கு நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனா். இந்நிலையில், தொடா்மழையால் கோயிலுக்கு அருகே ஓடும் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி வனத்துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நம்பிகோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் வியாழக்கிழமை (டிச.12) முதல் தடை விதித்துள்ளதுடன், மறு உத்தரவு வரும்வரையிலும் இந்தத் தடை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளனா்.