செய்திகள் :

மழை குறுக்கீடு: முதல்நாள் முடிவில் 300 ரன்களை கடந்து வலுவான நிலையில் ஆஸி.!

post image

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 81.1 ஓவரில் 330/2 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது.

வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

டிராவிஸ் ஹெட் அதிரடியாக 40 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த லபுஷேனின் விக்கெட்டை ஜெஃப்ரி வாண்டர்சே அசத்தலாக கைப்பற்றினார்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்து விளையாடிய கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி 195 ரன்கள் சேர்த்துள்ளது.

இதில் இருவருமே சதமடித்தார்கள். கவாஜா 147 ரன்கள் (210 பந்துகள்), ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்கள் (188 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

81ஆவது ஓவரில் மழை குறுகிட்டது. 9 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் மழை நிற்காததால் முதல்நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆஸி. ஸ்கோர் கார்டு

உஸ்மான் கவாஜா - 147*

டிராவிஸ் ஹெட் - 57

மார்னஸ் லபுஷேன் - 20

ஸ்டீவ் ஸ்மித் - 104*

இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வாண்டர்சே தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.

ஊன்றுகோலுடன் இருந்தேன்..! காயத்திலிருந்து மீண்டது குறித்து ஷமி பேட்டி!

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2023இல் விளையாடிய முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறினார்.பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து 14 மாதங்கள் கழித்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் பேட்டிங்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்க... மேலும் பார்க்க

தோல்விக்கு காரணம் என்ன? பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் பதில்!

முதல் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டியளித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந்தப் ப... மேலும் பார்க்க

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி..! மனம் திறந்த ரோஹித் சர்மா!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பந்துவீச்சு நுணுக்கங்களை சொந்த அணியிடம்கூட காண்பிப்பதில்லை எனக் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டி... மேலும் பார்க்க

ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுக்கும் க்ளென் பிலிப்ஸ்..! வைரலாகும் கேட்ச் விடியோ!

நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுப்பாரென வர்ணனையாளர் சைமன் டவுல் கூறியுள்ளார்.சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன.இந்திய அணியை பொருத்தவரை, அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெ... மேலும் பார்க்க