செய்திகள் :

மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார்: முதல்வர் ஸ்டாலின்

post image

மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தென் மாவட்டங்களுக்கு அதி மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார். மழை பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வரவில்லை.

இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்துக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன் செல்கிறார். நெல்லைக்கு அமைச்சர் கே.என். நேரு சென்று வந்துள்ளார், திரும்பவும் நெல்லைக்கு செல்லவுள்ளார்.

ஏரிகளில் நீர் திறப்புக்கு முன்னர், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து கடுமையாக எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.

எல்லா பழிகளையும் ஒருவர் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது: நடிகை ராஷ்மிகா

எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இப்போது நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. புஷ்பா 2... மேலும் பார்க்க

குளிர் அலை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் குளிர் காலம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து குளிர் அலை எச்சரிக்கையாக நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய நாட்களில் அம்மாநிலத்தின் வெப்ப... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட... மேலும் பார்க்க

நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்!

கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று(டிச. 13) உத்தரவிட்டுள்ளது.ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார... மேலும் பார்க்க

பெற்றோர் பைக் வாங்கி தராததால் சாவிகளை விழுங்கிய மகன்!

குண்டூர்: ஆந்திராவில் பெற்றோர் பைக் வாங்கித் தர மறுத்ததினால், மகன் கோபத்தில் நான்கு சாவிகளை விழுங்கியுள்ளார். பாலநாடு மாவட்டத்திலுள்ள நரசராப்பேட்டை எனும் ஊரைச் சேர்ந்த தேவரா பவானி பிரசாத் எனும் இளைஞர்... மேலும் பார்க்க