செய்திகள் :

மஹரசங்கராந்தி : தஞ்சாவூர் பெரிய கோயில் நந்திக்கு 2,000 கிலோ காய், கனி, இனிப்புகளில் அலங்காரம்

post image

உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பெங்கல் விழாவான நேற்று மாலை, மகாநந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பகதர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மஹரசங்கராந்தி, மாட்டு பொங்கல் விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்காக பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயில் மஹரசங்கராந்தி விழா

இதைதொடர்ந்து கோயில் வளாகத்தில், அமைந்துள்ள மகாநந்தியம் பெருமானுக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா உள்ளிட்ட பழங்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி, முறுக்கு உள்ளிட்ட இனிப்பு பலகாரம் மற்றும் பூக்கள் ஆகியவை கொண்டு சிரப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதன் மொத்த எடை 2,000 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அலங்காரம் முடிந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நந்தி மண்டபத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் பூசி மாலை அணிவித்தனர். மேலும் பட்டு துணி போர்த்தி கோ பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் பசு மாட்டுடன் வந்து கலந்து கொண்டு பூஜைகள் முடிந்த பிறகு பெருவுடையாரை வழிப்பட்டனர். நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

``சபரிமலை ஐயப்பனின் திருவபரண அலங்காரத்தை பெண்களும் தரிசிக்கலாம்" பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்!

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மகரவிளக்கு அன்று திருவாபரணங்கள் சாற்றி பூஜைகள் நடப்பது நமக்குத் தெரியும். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சாற்றப்படும் அதே திருவாபரணங்கள் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு சாற்றி வழிபடும... மேலும் பார்க்க

பொங்கல் தரிசனம்: `காசி முதல் திருக்கழுக்குன்றம் வரை'- அபூர்வ பலன்களை அருளும் சூரிய தலங்கள்

சூரிய பகவான், சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அவற்றுள் முதன்மையானது காசி. இங்கு, 12 திருநாமங்களுடன் 12 இடங்களில் எழுந்தருளி உள்ளார் சூரியன். இந்த பன்னிரண்டு ஆதித்தியர் (சூரியன்)க... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு! - கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்! - Album

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு.! கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்.! மேலும் பார்க்க

மனம் விரும்பும் புண்ணிய ஸ்தலங்கள் - என் புத்தாண்டு அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி திருக்கோயிலில் சுவாமி எழுந்தருளும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்க... மேலும் பார்க்க