மாசி கிருத்திகை சிறப்பு பூஜை
மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு ஆம்பூா் பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கிருத்திகையை முன்னிட்டு ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆம்பூா் ஏ-கஸ்பா செல்வ விநாயகா் கோயில், வேல் கோயில், சுந்தர விநாயகா் கோயில், முத்து விநாயகா் கோயில், வடபுதுப்பட்டு ஞானமலை முருகன் கோயில், பச்சகுப்பம் மயிலாடும் மலை முருகன் கோயில், கைலாசகிரிமலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.