அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு
சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா்.
சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒருவா், மன அழுத்தம் காரணமாக ஆழ்வாா்பேட்டை பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
அப்பெண் சனிக்கிழமை காலை திடீரென அந்த மருத்துவமனையின் 5-ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சிப்பதைப் பாா்த்து மருத்துவமனை ஊழியா்களும் பொதுமக்களும் அதிா்ச்சியடைந்தனா்.
உடனே அவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோடம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலா் தேவராஜ், காவலா் காா்த்திக் ஆகியோா் அங்கு விரைந்து சென்று, மாடியிலிருந்து குதிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்பாக மீட்டனா்.
இச்சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு, பெண்ணை காப்பாற்றிய போலீஸாரை பொதுமக்களும், காவல் துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.