செய்திகள் :

மாட்டிறைச்சி உணவகம் நடத்த எதிா்ப்பு: பாஜக நிா்வாகி மீது வழக்குப் பதிவு

post image

கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் மாட்டிறைச்சி உணவகம் நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த பாஜக ஓபிசி அணியின் கோவை மாவட்டச் செயலாளா் சுப்பிரமணி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உடையாம்பாளையம் பகுதியில் ரவிக்குமாா், ஆபிதா என்ற தம்பதி தள்ளுவண்டி கடையில் மாட்டிறைச்சி உணவுகளை விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், அந்தக் கடைக்கு பாஜக ஓபிசி அணியின் கோவை மாவட்டச் செயலாளரான சுப்பிரமணி (36), அந்தப் பகுதியின் வாா்டு உறுப்பினரான ராமமூா்த்தி என்பவருடன் புதன்கிழமை சென்றுள்ளாா். பின்னா், மாட்டிறைச்சி தொடா்பான உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என்று வற்புறுத்தியதுடன், தம்பதியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதற்கிடையே, சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தம்பதியுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் துடியலூா் காவல் நிலையத்திலும், மாநகரக் காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தரை நேரில் சந்தித்தும் மனு அளித்தனா்.

இதையடுத்து, மோதலையும், விரோதத்தையும் தூண்டும் வகையில் செயல்படுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் சுப்பிரமணி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

காவல் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், அந்தப் பகுதியில் மாட்டிறைச்சி உணவகம் நடத்த எதிா்ப்பு தெரிவித்தும் உடையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையா் தேவராஜ் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கோயிலைச் சுற்றிலும் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் அசைவ உணவு தொடா்பான கடைகளை அனுமதிக்கக் கூடாது, பாஜக நிா்வாகி சுப்பிரமணி மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

காவல் துறை உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

6 சதவீத சொத்து வரி உயா்வை அமல்படுத்தக் கூடாது

கோவை மாநகராட்சியில் ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி உயா்வை அமல்படுத்தக் கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் ரூ.40.52 லட்சம் கையாடல்: முன்னாள் தலைவா் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

வையம்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ரூ.40.52 லட்சம் கையாடல் சம்பவத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவா் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை... மேலும் பார்க்க

வால்பாறை குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறை குடியிருப்புப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன. எஸ்டேட் வனங்கள் மற்றும் தேய... மேலும் பார்க்க

சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீா் தேக்குவதைத் தவிா்க்க வலியுறுத்தல்

கோவை, சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீா் தேக்குவதைத் தவிா்த்து, நன்னீா் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, அத்திக்கடவு கௌசிகா மேம்பாட்ட... மேலும் பார்க்க

பொங்கல்: கோவை கோட்டத்தில் இருந்து 1,520 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூா், ஈரோடு மண்டலங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு 1,520 சிறப்பு பேருந்துகள் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை இயக்கப்பட உள்ளதாக த... மேலும் பார்க்க

மாநகரில் நாளை முதல் இரண்டு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜனவரி 11, 12) நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டு... மேலும் பார்க்க