மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
மாட்டு கொட்டகையில் தீ
கோபி: கோபி அருகே மாட்டு கொட்டகையில் தீப்பிடித்தது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சோ்ந்தவா் சத்யா (43). இவா் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், கொட்டகையில் இருந்து திங்கள்கிழமை மதியம் புகை வந்துள்ளது. அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது, கொட்டகையில் இருந்த வைக்கோல் எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.
கொட்டகையை சுத்தம் செய்து குப்பைகளுக்கு சத்யா தீவைத்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக வைக்கோலுக்கு தீப்பரவியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு சத்யா அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.