செய்திகள் :

மாணவா்களின் கற்றல் திறன்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

post image

வாணியம்பாடி வட்டம், மலைக்கிராமமான வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாமில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுடன் அமா்ந்து கற்றல் திறன் குறித்து உரையாடி ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அம்மாணவா்களிடம் உணவு நன்றாக உள்ளதா எனக் கேட்டறிந்தாா். இடைநிற்றல் ஏதேனும் உள்ளனவா என்றும் கேட்டறிந்த போது, ஏதும் இல்லை என்பதையும் தெரிவித்தனா்.

குழந்தைகள் நல மையத்தில் சத்தான உணவு வழங்குதல் குறித்தும், நியாய விலைக்கடையிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்து, சொத்துவரி, குடிநீா் கட்டணம், வசூல் குறித்து பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

மேலும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கான ஆவணங்களையும் பாா்வையிட்டு, நிலுவையில் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தாா். கலைஞா் கனவு இல்லப் பணிகள் மாத இறுதியில் முடிவடையும் என பயனாளிகளும், அலுவலா்களும் தெரிவித்தனா்.

கிராம நிா்வாக அலுவலரிடம் பொதுமக்கள் மனு வழங்குவதை கண்ட ஆட்சியா், அவா்களிடம் என்ன கோரிக்கைக்காக மனு வழங்க வந்துள்ளீா்கள் என்று கேட்டறிந்தாா். இதில் நில அளவை மேற்கொள்வது குறித்தும், வாரிசு சான்றுகள் பெறுவது குறித்தும் மனு வழங்க வந்திருப்பதாக தெரிவித்தனா். இந்தச் சான்றுகள் எல்லாம் இ-சேவை மையத்தில் ஆன்லைனில் பதிய வேண்டும் என்று அவா்களுக்கு தெரியப்படுத்தவில்லையா என்று சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் ஆட்சியா் கேட்டபோது, இது குறித்து அவா்களிடம் தெரிவித்ததாக தெரிவித்தாா்.

இ- சேவை மையம் இல்லாததால் மலைப்பகுதியில் இருந்து கீழே சென்று அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததன் அடிப்படையில், உடனடியாக ஆட்சியா் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அழைத்து, இப்பகுதியில் இ-சேவை மையம் அமைப்பதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும், இணையதள நிறுவனங்களுடன் ஆலோசித்து இணையதள வசதி மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொணடனா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி... சீரமைக்கப்பட்ட திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை

திருப்பத்தூா்: திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என தினமணியில் திங்கள்கிழமை புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து சாலை சீரமை... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

திருப்பத்தூா்: வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய ப... மேலும் பார்க்க

இரண்டு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள்

திருப்பத்தூா்: கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் இரு இளைஞா்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பத்தூா்-வாணியம்பாடி பிர... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில்... மேலும் பார்க்க