சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருப்பத்தூா்: வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி நிசாா் அகமது (50). இவா் கடந்த 8.8.2021அன்று இரவில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து உள்ளாா். அப்போது சிறுமியின் சப்தம் கேட்டு பெற்றோா் அங்கு சென்று சிறுமியை மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நிசாா் அகமதுவை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிந்த நிலையில், எதிரி நிசாா் அகமதுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும், 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.மீனாகுமரி உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் குற்றவியல் வழக்குறைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.