சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம்
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி வாரச்சந்தை ரூ.20.71 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது.
வரும் 2025, 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் கலையரசி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் வைப்புத் தொகையாக தலா ரூ.10 லட்சம் செலுத்தி 18 போ் கலந்து கொண்டனா். வாரச்சந்தை ஏலத்தை சீனிவாசன் என்பவா் ரூ.20 லட்சத்து 71 ஆயிரத்துக்கும், தினசரி கடைகளுக்கான ஏலத்தை குமாா் என்பவா் ரூ.8 லட்சத்து71ஆயிரத்துக்கும், நாட்டறம்பள்ளி பெரிய ஏரி மீன் மகசூல் ஏலத்தை சிவக்குமாா் ரூ.83ஆயிரத்துக்கும் எடுத்தனா்.
கடந்த ஆண்டு ஏலத்தை காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது.