Gold: 'மோதிரம் காணலை...' - நகை அடமான கடையில் மோசடி! - தீர்வு என்ன?
மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
கீழச்சுரண்டையில் சீஷா தொண்டு நிறுவனம் சாா்பில், மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன (படம்).
நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியை ஞானசிகாமணி தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரித் தாளாளா் ராஜகுமாா், தென்காசி தொகுதி திமுக பொறுப்பாளா் டாக்டா் கலைகதிரவன், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரகுமான், ஒன்றியக் குழு உறுப்பினா் ஷேக் முகைதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.