மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கடை அருகே குஞ்சாகோடு பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.விழுந்தயம்பலம், குஞ்சாகோடு பகுதியைச் சோ்ந்த சசி மகன் ஆதா்ஷ்(15). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
சசி, வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா். ஆதா்ஷின் தாயாா் உடல் நலக் குறைவால் மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆதா்ஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].