மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் கைது
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் அலிகாா் சாலை தெருவைச் சோ்ந்தவா் சீனிஅப்துல் காதா் மகன் முகம்மது அஜித் ரகுமான் (30) இவா், அருகில் உள்ள கிராமத்திலிருந்து பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா்.
இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகம்மது அஜித் ரகுமானை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.