செய்திகள் :

மாதம் ரூ. 2000 வழங்கும் அன்புக் கரங்கள் திட்டம்: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!

post image

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம்  முதல்வர் ஸ்டாலின் நாளை(செப். 15) தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏற்றமிகுதமிழ்நாட்டைஉருவாக்கிட, குழந்தைகளின்கல்விமற்றும்அவர்களின்சீரானவளர்ச்சிக்குதமிழ்நாடுஅரசுபல்வேறுதிட்டங்களைசிறப்பானமுறையில்செயல்படுத்திவருகின்றது.

மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின்வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்திட்டத்தின்ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்கஇயலாத குழந்தைகளைஅரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடுஅரசால்அறிவிக்கப்பட்டது. 

அக்குழந்தைகளின்18வயதுவரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம்ரூ. 2,000உதவித்தொகை வழங்குவதுடன்,பள்ளிப்படிப்பு முடித்தபின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கவழிவகை
செய்யும்இத்திட்டத்தினைமுதல்வர்மு.க. ஸ்டாலின் நாளை(செப். 15)சென்னை, கலைவாணர்அரங்கத்தில்தொடங்கிவைத்துகுழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்.

மேலும், பெற்றோர்இருவரையும்இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறுஉயர்கல்விநிறுவனங்களில் தமிழ்நாடுஅரசின்முயற்சியால்சேர்க்கப்பட்டுள்ளமாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் அன்றைய நாள்வழங்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

Chief Minister Stalin launches the Anbu Karangal scheme, which provides a monthly stipend of Rs. 2,000.

விஜய் வெளியே வரமாட்டான் என்றவர்கள் புலம்புகிறார்கள்..! தவெக தலைவரின் புதிய கடிதம்!

தவெக தலைவர் விஜய் புதிய அறிக்கையை வெளியிட்டு அதில் தனது பயணத்துக்கு வந்தக் கூட்டத்தைப் பார்த்து பலரும் பலவிதமாக புலம்பி வருவதாகக் கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சி... மேலும் பார்க்க

சிம்பொனி உருவாகக் காரணம் யார்? இளையராஜா நன்றி!

சிம்பொனி உருவாக தனது குழந்தைகள்தான் காரணம் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இசைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 14) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓசூர் விம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 85,711 பேருக்கு வீட்டுமனை பட்டா - முதல்வர் அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையி... மேலும் பார்க்க

விராலிமலை: கி.பி 13 ஆம் நூற்றாண்டு வீரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள மைலாப்பட்டி மலை மீது சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்துத் தானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.பேராசிரியர் மு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.2,885 கோடியில் திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, புதிய திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 14) தொடக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி... மேலும் பார்க்க