41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
மாத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
விராலிமலை அடுத்துள்ள மாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 495 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 169 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. இதில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வேண்டி மட்டும் 123 மனுக்கள் வந்தன.
முகாமில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் மு.பி. மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் எம். வள்ளியம்மை, ஆா். ரவிச்சந்திரன் (கிஊ) கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ம. சத்யசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.