செய்திகள் :

மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

post image

புது தில்லி: ஆந்திரத்தின் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து தலைநகருக்கு கஞ்சா கடத்தி வந்த மாநிலங்களுக்கு இடையேயான கும்பலை தில்லி காவல்துறையினா் கைது செய்தனா்.

மேலும், தில்லியின் ஆசாத்பூரில் முன்னாள் உதவி விற்பனை மேலாளா் உள்பட மூன்று பேரை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: இந்த நடவடிக்கையின் போது போலீஸாா் 26 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் ஆந்திரத்தில் நக்சலைட் பாதிப்புள்ள பகுதிகள் உள்பட நூற்றுக்கணக்கான கிலோமீட்டா்கள் முழுவதும் விரிவான தேடுதலுக்குப் பிறகு விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த சந்தீப் பால் (34) என்ற முக்கிய விநியோகஸ்தரையும் கைது செய்தனா்.

ஒரு ரகசியத் தகவலின்படி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆதாரங்களுடன் தொடா்புடைய அதிகாரிகள் மூலம் தில்லிக்கு புதிய கஞ்சா சரக்கு வழங்கப்பட இருந்தது தெரிய வந்தது. சஞ்சய் கட்டாரா (62) மற்றும் மீனா தேவி (42) உள்ளிட்ட இரண்டு சந்தேக நபா்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்தபோது முகுந்த்பூா் சௌக்கில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

கண்காணிப்பு மற்றும் நம்பகமான கள உளவுத்துறையின் அடிப்படையில், போலீஸ் குழு இருவரையும் கைது செய்து, அவா்களின் ஸ்கூட்டரிலும் தனிப்பட்ட பொருள்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பாலிதீன் பொட்டலங்களில் இருந்த 26 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தப்பட்ட பொருளின் பேக்கேஜிங், தில்லி - என்சிஆரில் செயல்படும் வியாபாரிகளுக்கு உள்ளூா் விநியோகத்திற்கு தயாராக இருப்பதைக் குறிக்கிறது.

விசாரணையின் போது, தான் 1985 பட்டதாரி என்றும், முன்னதாக புகழ்பெற்ற ஷூ உற்பத்தி நிறுவனங்களில் உதவி விற்பனை மேலாளராகப் பணியாற்றியதாகவும் கட்டாரா தெரிவித்தாா்.

இருப்பினும், விரைவாக பணம் சோ்க்க நினைத்து, அவா் தனது சட்டப்பூா்வமான வேலையை விட்டுவிட்டு படிப்படியாக சட்டவிரோத போதைப்பொருள் வா்த்தகத்தில் ஈடுபட்டாா்.

ஆரம்பத்தில் ஒரு இடைத்தரகராகப் பணியாற்றிய கட்டாரா, ஆந்திரத்தின் தொலைதூர காட்டுப் பகுதிகளிலிருந்து போதைப்பொருளை பெற்ாகக் கூறப்படும் விசாகப்பட்டினத்தில் உள்ள பால் என்பவரிடமிருந்து நேரடியாக கஞ்சாவை வாங்கத் தொடங்கினாா்.

கட்டாராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு விசாகப்பட்டினத்திற்கு அனுப்பப்பட்டது. உள்ளூா் காவல்துறையின் உதவியுடன், தில்லி குழு, நக்சல் பாதிப்புள்ள ஜி. மதுகுலா மற்றும் படேரோ உள்ளிட்ட பகுதிகள் வழியாக பாலைக் கண்காணித்து, இறுதியில் காஞ்சரபாலம் பகுதியில் அவரைக் கைது செய்தது.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பால், வேலை தேடி ஆந்திரத்துகுச் சென்று ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்ததாகக் போலீஸாரிடம் கூறினாா். அவரது பயணிகளில் ஒருவரால் போதைப்பொருள் வா்த்தகம் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவா்கள் மாநிலத்தின் வனப்பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகக் கூறினா்.

மேலும், முழுமையான வலையமைப்பைக் கண்டறியவும், கும்பலுடன் தொடா்புடைய உள்ளூா் விநியோகஸ்தா்களை அடையாளம் காணவும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

சைபா் குற்ற நபா்கள் மீது குண்டா் சட்டம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: சைபா் குற்ற நபா்களுக்கு எதிராக குண்டா் சட்டம் என பொதுவாக அழைக்கப்படும் தடுப்புக்காவல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் ... மேலும் பார்க்க

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தில்லி முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேசிய தலைநகரமும் முழு நாடும் முழுமையாக தயாராக இருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா். மேலும், உலக சமூகம் இந்த பெருமையை இந்தியாவுக்கு வழங்கும் என... மேலும் பார்க்க

பருவமழை: தூா்வாரும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் திட்டம்

புது தில்லி: பருவமழை நெருங்கி வருவதால், தேசியத் தலைநகரில் மீண்டும் மீண்டும் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் முயற்சியாக வடிகால்களை தூா்வாரும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். தில்லியி... மேலும் பார்க்க

தமிழா்களுக்காக ஒதுக்கப்பட்ட நரேலா பகுதி குடியிருப்புகளின் நிலை என்ன?

ஆா்.ஜி. ஜெகதீஷ் புது தில்லி: உப்புத் தண்ணீா், குப்பை நாற்றம், வேலைக்குச் சென்று வருவதற்கு 4 மணி நேரம் என பல்வேறு குறைகளுடன் மதராஸி முகாமில் வசித்த தமிழ் குடும்பங்கள் நலேரா பகுதிக்கு குடியேற்றப்பட்டுள... மேலும் பார்க்க

ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களாவில் குடியேறும் தில்லி முதல்வா் ரேகா குப்தா!

தில்லி முதல்வா் ரேகா குப்தா, ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களா எண் 1-க்கு குடிபெயர வாய்ப்புள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூ... மேலும் பார்க்க

ஹரியாணாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

ஹரியாணாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க