லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்
சென்னை: மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையம் அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும் மாற்றுத்திறனாளிகள் பயில, அவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை சமீபத்தில் அரசு இருமடங்காக உயா்த்தியுள்ளது. ‘டிஎன் ரைட்ஸ்’ திட்டத்தின் கீழ் ‘விழுதுகள்’ என்று அழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைக்க அரசு முனைந்துள்ளது.
சோழிங்கநல்லூரில் இதன் முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி இதுபோன்ற மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படவுள்ளன என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.