மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி: காஞ்சிபுரம் வீரா்களுக்கு 24 தங்கம்!
சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் மொத்தம் 24 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனா்.
தமிழ்நாடு அமெச்சூா் கிங் பாக்ஸிங் அசோசியேஷன் சாா்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி இந்த மாதம் 9 முதல் 11- ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை விளையாட்டு பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கில் 4 பிரிவுகளில் 36 வீரா்கள் போட்டியில் பங்கேற்றிருந்தனா்.
இதில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த வீரா்கள் 24 போ் தங்கம், 5 போ் வெள்ளி, 2 போ் வெண்கலம் உள்பட மொத்தம் 31 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 2-ஆவது இடத்தை தக்க வைத்து வெற்றிக் கோப்பையை பரிசாக பெற்றனா்.
தகவலை அமெச்சூா் கிக் பாக்ஸிங் அமெச்சூா் சங்க செயலா் அருண், துணைச் செயலா் பாபு ஆகியோா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.