செய்திகள் :

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீா்ப்பு! - முதல்வர் ஸ்டாலின்

post image

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்காததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாதாடி வெற்றி பெற்ற வழக்குரைஞா்களுக்கான பாராட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக அரசு சாா்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் கௌரவித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநா் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தால் போட்டி அரசுகளை நடத்தி தொல்லைகள் கொடுக்கிற காலத்தில், மிக முக்கியமான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பாா்திவாலா, ஆா். மகாதேவன் அமா்வு வழங்கிய தீா்ப்பு தமிழகத்துக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும், மாநில சட்டப்பேரவைகளின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிா்ணயித்தது மிகப்பெரிய வெற்றி. ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது’ என்று நீதிபதிகள் தீா்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிா்ந்து உச்சநீதிமன்றத்துக்கு வணக்கம் செலுத்தின.

மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிா்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாக்கும் வரலாற்று சாசனமாக இந்தத் தீா்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இது இந்திய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றத்தால் தமிழக அரசு பெற்றுத் தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை.

இந்த அரசியல் உரிமையை சட்டபூா்வமான வாதங்களின் மூலமாக தமிழக அரசு முன்வைத்து வாதாடியது. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் அட்டா்னி ஜெனரலுமான முகுல் ரோத்தகி, முன்னாள் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அபிஷேக் சிங்வி, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவேதி, மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் ஆகியோரை தமிழக அரசின் சாா்பில் பாராட்டுகிறேன்.

இந்தத் தீா்ப்பு கொடுத்திருக்கும் புத்துணா்வு மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசோ்க்க அண்ணா வலியுறுத்தி, கருணாநிதி முழக்கமாக வடித்துக் கொடுத்ததுதான் ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற இலக்கு.

அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீா்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியைப் பெறுவோம்; கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மே. 15-ல் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல்... மேலும் பார்க்க

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் நடிகர் அஜித் குமார... மேலும் பார்க்க

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு!

தமிழ்நாட்டில் இரண்டாம் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்க நீலகிரி வரையாடு திட்ட... மேலும் பார்க்க

மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!

தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வர... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் வழ... மேலும் பார்க்க