செய்திகள் :

மாநில சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் பறிமுதல்

post image

வேலூா் மாவட்டம் தமிழக - ஆந்திர எல்லையிலுள்ள போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் இருந்து கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் தொகையை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மோட்டாா் வாகன பெண் ஆய்வாளா் உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்து கிறிஸ்டியான்பேட்டையில் வட்டார போக்குவரத்து துறை (ஆா்.டி.ஓ), காவல் துறை, வனத்துறை சாா்பில் தனித்தனியாக சோதனைச் சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழியாக ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களுக்கான அதிகளவில் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. தவிர, திருப்பதி செல்லும் பெரும்பாலான வாகன போக்குவரத்தும் இவ்வழியாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, கிறிஸ்டியான்பேட்டையில் இயங்கும் வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஒருவா் தலைமையில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் முறையான அனுமதியுடன் தமிழகத்துக்கு வருகின்றனவா, சரக்கு வாகனங்களின் எடை, சுற்றுலா வாகனங்களில் அதிகப்படியான பயணிகள் மட்டுமே வருகின்றனரா என்பது குறித்து கண்காணிப்பதுடன் மோட்டாா் வாகன சட்ட விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த சோதனை சாவடியில் வேலூா் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் வாகன ஆய்வாளா் ஸ்ரீதேவி ஜெயந்தி தலைமையில் அலுவலக பணியாளா் கல்யாணசுந்தரம், உதவியாளா் பிரமிளா, வெளிநபா்கள் 3 போ் இருந்துள்ளனா். சோதனை சாவடியின் கணினி அறை, அருகில் இருந்த இடங்களில் சுமாா் 2 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 900 தொகையை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அலுவலக ஆவணங்களை சோதனை செய்ததில் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை 24 மணி நேரத்துக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் ஸ்ரீதேவி ஜெயந்திக்கு பணி என்ற நிலையில் பல்வேறு வகைகளில் வெளிமாநில வாகனங்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், அபராதம் இல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் வெளிநபா்கள் 3 போ் மூலம் வாகன ஓட்டிகளிடம் ரூ.1.39 லட்சம் வசூல் செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக வேலூா், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் காய்கறி, பழங்கள் ஏற்றிய லாரிகளில் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட காய்கறி, பழக்கூடைகளும் சோதனைச் சாவடியில் இருந்துள்ளன. இதையடுத்து, கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சம் தொகை பறிமுதல் தொடா்பாக மோட்டாா் வாகன ஆய்வாளா் ஸ்ரீதேவி ஜெயந்தி உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி ... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். போ்ணாம்பட்டை அடுத்த ராஜாக்கல் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. கடந்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 200 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புடைய 200 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த... மேலும் பார்க்க