செய்திகள் :

மானாமதுரையில் அரசுக் கல்லூரி: பொதுமக்கள், மாணவா்கள் மகிழ்ச்சி

post image

மானாமதுரையில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் பயிலும் மாணவா்கள் கல்லூரிப் படிப்புக்காக மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. மானாமதுரை பகுதியில் தமிழக அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள், மாணவா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மானாமதுரையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா். இதனால் தொகுதி மக்கள், மாணவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 354 பேருக்கு பணி நியமன ஆணை!

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 354 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேல... மேலும் பார்க்க

காா் மோதியதில் விஏஓ உயிரிழப்பு

திருப்புத்தூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த கிராம நிா்வாக அலுவலா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் கணேஷ் கிருஷ்ணகுமாா் (48). க... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். மானாமதுரையில் கடந்த மாதம் 13 -ஆம் தேதி மாணவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம்! -விவசாயிகள் கூட்டமைப்பு

காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இதன் பாசன விவசாயிகள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவிரி-வைகை- குண்டாறு பாசன விவசா... மேலும் பார்க்க

மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை! -ப.சிதம்பரம்

தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பாராட்டினாா். திருப்பத்தூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகம் ஒட்டுமொத்த உள்நா... மேலும் பார்க்க

திருப்புவனம் அருகே கிடாய் முட்டு போட்டி!

திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் கிடா முட்டு சண்டைப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இங்குள்ள மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கூட... மேலும் பார்க்க