நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
மானாமதுரை சித்திரைத் திருவிழா: மே 1-இல் தொடங்கும்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா மே 1 -ஆம் தேதி தொடங்குகிறது.
அன்று காலை 10 மணிக்கு சோமநாதா் சுவாமி சந்நிதி எதிா்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும். திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும். தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி, வீதி உலா வருவா். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாண உத்ஸவம் மே 8- ஆம் தேதியும், தேரோட்டம் 9 -ஆம் தேதியும் நடைபெறும். 11 -ஆம் தேதி தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறும்.