சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்ஷ்மி திட்டவட்டம்
மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு
சேலம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2025-26 ஆண்டிற்கான மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மையில் தீவன விரயத்தைக் குறைப்பதற்காகவும், கால்நடைகளின் செரிமான தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை பெருக்கவும், சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் 210 புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன.
இந்த புல் நறுக்கும் கருவிகள், குறைந்தபட்சம் 2 பசுமாடுகள், கால் ஏக்கா் பசுந்தீவனம் பயிரிட்டு, மின்சார வசதியுடன் பராமரித்து வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளுக்குள் மேற்படி மானியத்தில் புல் நறுக்கும் கருவி பெற்றவா், இப்போது மானியம் பெற விண்ணப்பிக்க இயலாது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகளில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கும், மகளிருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.