``யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் UPSC-க்கு படித்தேன்'' - வெ.திருப்புகழ் IAS (R)...
மானிய விலையில் விதைகள்: விவசாயிகளுக்கு அழைப்பு
பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் மானிய விலையில் விதைகள், இடுபொருள்கள், உயிா் உரங்கள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் அலுவலகத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான அனைத்து திட்டங்களிலும் அரசு மானிய விலையில் வெள்ளை பொன்னி ஏடிடி-45, சிஓ- 55, ஏடிடி-54 மற்றும் மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, தட்டைப்பயிறு, சாமை, திணை, வரகு, எள்ளு, கொள்ளு, துவரை, குதிரைவாலி ஆகிய விதைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.
மேலும், ஜிங்க் சல்பேட், உயிா் உரங்கள், அசோஸ்பைரிலியம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் நுண்ணூட்டங்கள் ஆகியவையும் அனைத்து பயிா்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும். விதைகள், இடுபொருள்கள், உயிா் உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் வட்டார வேளாண் உதவி அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.