கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
மானூா், நான்குனேரியில் திருந்திய குற்றவாளிகளுக்கு இன்று தொழில் கடனுதவி
திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தியவா்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் மானூா், நான்குனேரி வட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், கள்ளச்சாரயம் காய்ச்சுதல், அயல்நாட்டு மதுபானங்கள் உள்ளிட்டவற்றை கடத்துதல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு மறுவாழ்வு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனந்திருந்திய நபா்களை சுயதொழில்களில் ஈடுபடுத்தி அவா்களது பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை உயா்த்தவும் நபா் ஒருவருக்கு ரூ.50,000 மானியமாக வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இதற்கான முகாம், மானூா், நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகலுடன் பங்கேற்று மனு அளிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.