செய்திகள் :

``மார்கழியில் கோலப்பொடி விற்பனை; மற்ற மாதங்களில் கூலி வேலை" -பொங்கலை நம்பி வாழும் 90 குடும்பங்கள்

post image

இருதயபுரம் விசிட்

கலர் கோலப்பொடி என்றாலே கொண்டாட்டம்தான். பொதுவாகவே விசேஷ நாள்களிலும், சுப நிகழ்ச்சிகளிலும் வண்ணக்கோலம் இடுவது வழக்கம். அந்த வகையில் புத்தாண்டு, தைத்திருநாள், மார்கழி மாதம் போன்ற விசேஷ நாள்களில் கண்கவர் வகையில் கலர் கோலப்பொடிகளை பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் பார்க்கலாம். கலர் கோலப்பொடிக்கு புகழ் பெற்றது திண்டிவனம் அடுத்துள்ள இருதயபுரம், அங்கு ஒரு விசிட் அடித்தோம்.

கோலப்பொடி விற்பனையில் இருதயபுரம் மக்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இருதயபுரத்தில் சென்னை டு பெங்களூர் நெடுஞ்சாலையில் 90-க்கும் மேற்பட்ட கலர் கோலமாவு கடைகள் சாலையொட்டி அமைந்துள்ளன. சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை கலர் கோலமாவுகள், கடந்து போகும் இடமெல்லாம் கலர் பொடிகள் தான் என கலைகட்டுகிறது கலர் கோலமாவு விற்பனை. கடைகளின் எண்ணிக்கையில் பார்த்தால் 90 கடைகள் தான். ஆனால் உற்று நோக்கினாள் அவை 90 குடும்பங்கள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக கலர் கோலப்பொடிகளை உற்பத்தி செய்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

கலர் கோலப் பொடிகள் தயாரித்து விற்பனை

இதில் சிறப்பு என்னவென்றால் இவற்றில் பெரும்பாலானோர் பெண்கள். சேலத்தில் இருந்து வெள்ள கோலப் பொடி மூட்டைகளை கொண்டு வந்து, அவற்றில் வண்ண நிறங்கள் சேர்த்து, நன்றாக கலந்து, வெயிலில் காய வைத்து விற்பனை செய்பவர். கலர் லிக்விட் சென்னையிலிருந்து வாங்கி வருவர். பெரும்பாலும் அரை மூட்டை கோலப்போடியில் ஒரு பாட்டில் திரவத்தை கலந்து கலர் கோலப்பொடி தயார் செய்கிறார்கள். முப்பத்திற்கும் மேற்பட்ட வண்ணங்களில் கலர் கோலப் பொடிகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கோலப்பொடி விற்பனையில் இருதயபுரம் மக்கள்

கோலமாவு விற்பனையில் மும்முரமாக இருந்த கஸ்தூரி பேசும் போது, "நாங்க பிறந்ததிலிருந்தே இந்த தொழிலை பார்த்து தான் வளர்ந்தோம். தலைமுறை தலைமுறையாக கோலமாக விற்பனை செய்து வருகிறோம். அதிகமாக மார்கழி மாதத்தில் தான் கடை போட்டு விற்பனை செய்வோம். ஒரு பாக்கெட் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இவை அறப்படியாக கணக்கு. 15 பாக்கெட் சேர்த்து ஒரு பேக்கேஜாக வாங்கினால் 100 ரூபாய்க்கு கொடுக்கிறோம். பக்கத்து அக்கத்து ஊர்களில் விற்பனை செய்தால், பழைய பொருள்களுக்கும் கோலமாவு கொடுக்கிறோம்.

பொங்கல் வியாபாரம்...

இந்த சாலையை கடந்து போகும் பெரும்பாலானோர் கோலமாவினை வாங்கித் தான் செல்வர். விடுமுறை நாள்களில் குழந்தைகளும் கடைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபடுவர். நாங்கள் ஒரு பாக்கெட்டிலேயே நிறைய கோலமாவு போட்டு தான் விற்பனை செய்கிறோம். ஆனாலும் அதிலையும் பேரம் பேசி தான் வாங்குகிறார்கள்.

கோலப்பொடி விற்பனையில் இருதயபுரம் மக்கள்

பொங்கலுக்கு முந்தன வாரம் நல்ல வியாபாரம் ஆகும். அப்பொழுது ஒரு நாளிற்கு 5000 முதல் 7000 ரூபாய் வரை விற்பனையாகும். மற்ற நாள்களில் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும். பொங்கல் முடிந்த பிறகு மீதமுள்ள கோலமாவுனை அடுத்த வருடம் விற்பனைக்காக பாதுகாப்பாக வைத்து விடுவோம்.

கோலப்பொடி விற்பனையில் இருதயபுரம் மக்கள்

மார்கழி மாதத்தில் என்றாவது ஒரு மழை எங்கள் வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும். மழை வந்தாலே எங்களுக்கு வேதனை தான்‌. மழையில் இருந்து பாதுகாப்பாக கோலமாவினை தார்பாய் போட்டு மூடி விடுவோம். பொழுது விடியும் போது கடை போடுவோம். பொழுது சாயும் போது கடையை மூடுவோம். விடியகாலையில் வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து விட்டு பின்பு தான் கடையை போடவே தொடங்குவோம். மார்கழி மாதத்தில் கோலமாவு விற்பனை செய்வோம். மற்ற மாதங்களில் கூலி வேலைக்கு செல்வோம். மழை வெயில் என்று பாராமல் தினமும் விற்பனையில் ஈடுபடுவோம். ஒரு சில நாள்களில் நன்றாக விற்பனையாகும். ஆனால், ஒரு சில நாள்களில் பெரிதும் விற்பனையாகாது.

ஆனாலும், மனம் தளராமல் இந்த மாதம் முழுவதுமே விற்பனையில் ஈடுபடுகிறோம். கடைகளில் விற்பனை செய்வோர் மூட்டையாக எங்களிடமிருந்து கோலமாவினை வாங்கி விற்பனை செய்வர். சில்லறை விலையிலும் கோலமாவினை கொடுக்கிறோம். எங்கள் குழந்தையின் படிப்பிற்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவுமே இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று புன்சிரிப்பிடம் கூறினார்.

இவர்களின் வாழ்வு சிறக்க, பொங்கல் திருநாள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Jallikattu: அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பதிவு செய்த 12,632 காளைகள், 5,347 வீரர்கள்

தமிழர்களின் உற்சாகத் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடைபெறும். அதில் முக்கியமாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலமானவை.அவனிய... மேலும் பார்க்க

Jallikattu: நெருங்கும் ஜல்லிக்கட்டு.. காளைகளுக்கு முழு வீச்சில் பயிற்சி| Photo Album

ஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சிஜல்லிக்கட்டு பயிற்சி மேலும் பார்க்க

``மெரினா போராட்டத்தைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.." -ஜல்லிக்கட்டில் சாதிக்கும் சென்னை வீரா பாய்ஸ்

சென்னையிலும் ஜல்லிக்கட்டு..பொங்கல் வந்தாலே தமிழர்களுக்கு கொண்டாட்டம். அதுவும், தென்மாவட்ட மக்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம். காரணம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் உலகப் ... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் சென்னை; பல வண்ணங்களில் குவிக்கப்பட்ட மண் பானைகள்! | Photo Album

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டே... மேலும் பார்க்க

``அமெரிக்கா கிளம்பும்போதுதான் அரியர்ஸ் முடித்தேன்!'' - பல்கலை. விழாவில் FeTNA தலைவர் உற்சாக பேச்சு

முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா... "நான் படிப்பில் சுமார்தான், இக்கல்லூரியில் படித்தபோது அரியர் வைத்து, வேலைக்காக அமெரிக்காச் செல்லும்போது முடித்த மாணவன் நான்" என்று, அமெரிக்காவில் கணினித்துறையில... மேலும் பார்க்க