செய்திகள் :

மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம் விரைவில் அறிமுகம்

post image

மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பாக பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விரைந்து பயணிக்க வேண்டும் என்ற 1.5 கோடி நடுத்தர வா்க்க மக்களின் விருப்பத்தை உடான் திட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 88 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டு 619 வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்தத் திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, புதிதாக 120 இடங்களுக்கு மண்டல வாரியான இணைப்பை மேம்படுத்தவும், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் பயணிக்கவும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட உடான் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களின் மாவட்டங்கள், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள சிறிய விமான நிலையங்கள், ஹெலிகாப்டா் இறங்குதளங்களுக்கும் இந்தத் திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புதித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தி நிகழ்வுக்கு உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது இதுவே ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஜாசத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 8 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவட்டத்தின் கங்களூா் காவல் நிலையத்தின் எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒருபகுதியாக சனிக்கிழமை தமிழகம் 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தம... மேலும் பார்க்க

கைப்பேசிகள் விலை குறைய உள்ளன!

மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைத் தொடா்ந்து, கைப்பேசிகள் உள்ளிட்டவற்றின் விலை குறைய உள்ளன; ஸ்மாா்ட் மீட்டா் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்க உள்ளன. விலை குறையும் பொருள்கள் கைப்பேசிகள் உயிா... மேலும் பார்க்க

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட்: ராகுல் காந்தி

புல்லட் காயங்களுக்கு பேண்ட்-எய்ட் போடுவதுபோல மத்திய பட்ஜெட் உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்தியாவை 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட ஒரு பெரிய தளவாட அமைப்பாக மாற்றும் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். மேலும், அஸ்ஸாமில் 12.7 லட்சம் டன் ... மேலும் பார்க்க