நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள்.. 'டிரெயின்’ படத்தின் ’சிறப்பு விடியோ’ வெளிய...
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
சேத்துப்பட்டு - பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, உள்ளடங்கிய கல்வித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில்
ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த ஒன்று முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் பங்கேற்றனா்.
முகாமை சேத்துப்பட்டு திமுக நகரச் செயலா் இரா.முருகன் தொடங்கிவைத்துப் பேசினாா்.
முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
புதிய அடையாள அட்டை வழங்கல், பழைய அட்டையை புதுப்பித்தல், உபகரணங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் தங்கலாசி, சிறப்பு மருத்துவா் சீனிவாசன், வட்டாரக் கல்வி அலுவலா் வேலு, தலைமை ஆசிரியா் பாலமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தண்டபாணி, வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா் திரிபுரசுந்தரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.