மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து!
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் நலனைக் கருதி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அறை எண் 20- இல் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஜனவரி 21- ஆம் தேதி முதல் பிப்ரவரி 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகவே, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜனவரி 24, ஜனவரி 31, பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.