Empowerment: திருநங்கைகளும் குடும்ப வன்முறை வழக்கு தொடர முடியுமா?
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு
மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வருகிற செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஓ. இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024-25-ஆம் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள், வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் ஆகியோருக்கு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்க கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை பயன்படுத்தக்கூடிய கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், இலவசப் பேருந்து பயணச் சலுகை அட்டையைப் பயன்படுத்தும் கால அவகாசம் வருகிற செப்.30 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அனைத்து அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சுற்றறிக்கை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச, சலுகை கட்டணப் பேருந்து அட்டையை செப். 30-ஆம் தேதி வரை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது என்றாா்.