மாற்றுத்திறனாளிக்கு அதிநவீன செயற்கைக் கால்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் வழங்கினாா்
மாற்றுத்திறனாளிக்கு அதிநவீன செயற்கை காலினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கடந்த மாதம் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட ஆசனூா் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ரவிச்சந்திரன் தனக்கு செயற்கை கால் வழங்க வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தாா். இதில் துரித நடவடிக்கை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
அதன்படி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன செயற்கை காலினை மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியா் வழங்கினாா்.
இந் நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, முடநீக்கியல் நிபுணா் பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.