செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா சாம்பியன்!

post image

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இலங்கையில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய யோகேந்திர பதோரியா 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா சாம்பியன்

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்களின் முடிவில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ராதிகா பிரசாத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் விக்ராந்த் கெனி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயருக்கு பிசிசிஐ மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம்... மேலும் பார்க்க

முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.அதிரடி பேட்டா் சூா்யகுமாா் யாதவ் தலைமையில் களம் காணும் இந்திய அணியில், பிரதான வேகப்பந்து வீச்சாளா் முகம... மேலும் பார்க்க

வைஷ்ணவி சா்மா சாதனை; இந்தியா அசத்தல் வெற்றி!

மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசிய அணியை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.இந்த ஆட்டத்தில... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதை டி20 தொடர் பாதிக்காது: ஜோஸ் பட்லர்

டி20 போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதைப் பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமளிக்கவில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அஸ்வின் கருத்து!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ... மேலும் பார்க்க