தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோ...
மாவட்டத்தில் 7.5% இட ஒதுக்கீட்டில் 37 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்கு தோ்வு
திருப்பூா் மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 37 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹேமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வான ‘நீட்’ தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இதில், 2025-26-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் 7 தோ்வு மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா். இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 354 மாணவா்களும் எழுதினா்.
தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 14-ஆம் தேதி வெளியான நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தோ்வு எழுதிய 354 மாணவ, மாணவிகளில் 163 போ் தோ்ச்சி பெற்றனா்.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில், மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 37 மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.