சேவல் சண்டை: 5 போ் கைது
முத்தூா் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் மங்கலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, பூமாண்டன்வலசு பகுதியில் சேவல் சண்டை நடைபெறுவது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சேவல் சண்டையில் ஈடுபட்ட மங்கலப்பட்டியைச் சோ்ந்த காா்வேந்தன் (26), நவீன்குமாா் (25), ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சோ்ந்த நந்தகுமாா் (31), கோபாலகிருஷ்ணன் (32), நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பெரியசாமி (51) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 4 சேவல்கள், ரூ.2,900 ரொக்கம், இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.