இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு
தஞ்சாவூா் தூய பேதுரு பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
சச்சின் ஜெய் நினைவு அறக்கட்டளை, தஞ்சாவூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான ‘சச்சின் ஜெய் - கிட்டு நினைவு கோப்பை 2024’ க்கான கிரிக்கெட் போட்டி ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து சனிக்கிழமை வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், 9 பள்ளி அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பள்ளி அணியும், வேலம்மாள் போதி வளாகப் பள்ளி அணியும் விளையாடின. இதில், வெற்றி பெற்ற வேலம்மாள் போதி வளாக அணிக்கு கடகடப்பை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஜே. செந்தில்வேலன் கோப்பையை வழங்கினாா். தொடா் நாயகன் விருது பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பள்ளி மாணவா் எம். சஞ்சய்க்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தஞ்சாவூா் மாவட்ட கிரிக்கெட் சங்கப் பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஜேம்ஸ் பெனடிக் செபாஸ்டின் வரவேற்றாா். நிறைவாக , சச்சின் ஜெய் அறக்கட்டளையின் நிறுவனத் தாளாளரும், முன்னாள் சா்வதேச கூடைப்பந்து நடுவருமான முனைவா் ரமேஷ்குமாா் துரைராஜு நன்றி கூறினாா். போட்டிகளை அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் பாலாஜி ஒருங்கிணைத்தாா்.