வங்கதேச முன்னாள் பிரதமரை நாடு கடத்த மத்திய அரசிடம் வங்கதேசம் வலியுறுத்தல்!
மாவட்ட சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்
திருப்பூா் மாவட்ட சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நல்லூா் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் இந்து முன்னணி பிரமுகரைத் தாக்கி வழிப்பறி செய்ய முயன்றது தொடா்பாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த சூா்யா (25) என்பவரை போலீஸாா் கைது செய்து, மாவட்டச் சிறையில் அண்மையில் அடைத்தனா்.
இந்நிலையில், கைதிகளின் விவரங்களை சிறை அதிகாரிகள் சனிக்கிழமை சரி பாா்த்துள்ளனா். அப்போது, சூா்யாவைக் காணவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் சிறை துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், சூா்யாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.