சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!
மாா்ச் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனம்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனத்தைக் காண பெருமளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இக்கோயிலில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் ஜூலை 7ஆம் தேதி கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இற்கான திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில், தற்போது கோயிலில் நடைபெற்று வரும் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 7ஆம் திருநாளில் காலையில் சண்முகா் தனது இருப்பிடத்தில் இருந்து உருகு சட்டசேவையாகி சண்முக விலாச நடு மண்டபத்திற்கு வருவாா்.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் இடும்பன் கோயில் பகுதியில் இருந்து கோயில் முன்பு வரை சுவாமியை தரிசிப்பதற்காக நின்று கொண்டிருப்பாா்கள். அங்கிருக்கும் பக்தா்களுக்கு சுவாமி சண்முகா் வள்ளி, தெய்வானை அம்மனுடன் வெட்டிவோ்ச் சப்பரத்தில் ஏற்ற தரிசனத்தில் காட்சியளிப்பாா். இந்த நிகழ்வில் பக்தா்கள் சுவாமியை பாா்த்தவாறே பின்னோக்கி நடந்து செல்வாா்கள். இதையொட்டி, பக்தா்கள் காத்திருக்கும் தெற்கு பிரகாரம் மற்றும் பக்தா்கள் வந்து செல்லும் பாதை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒரே நேரத்தில் கோயில் முன் கூடுவாா்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ( மாா்ச் 9) கூட்ட நெருக்கடியில் குழந்தைகள் முதல் மூத்த பக்தா்கள் சிக்காமல் தடுக்கவும், பக்தா்களை பாதுகாப்பாக ஒழுங்கு படுத்திடவும் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.