மாா்த்தாண்டம் அருகே படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி
மாா்த்தாண்டம் அருகே வீட்டு படிக்கட்டில் தவறிவிழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.
சென்னை கொடுங்கையூா், ராஜரெத்தினம் நகரைச் சோ்ந்தவா் தீனதயாளன் (45). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பக்கத்துவீட்டில் கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி, நெல்வேலி பகுதியைச் சோ்ந்த சிவகாளிதாசன் வசித்து வந்தாா். இவருடன் தீனதயாளன் நட்பாக பழகி வந்தாா். சிவகாளிதாசன் அண்மையில் சென்னையில் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு வந்தாா். அவருடன் தீனதயாளனும் வந்து தங்கியிருந்தாா்.
இந் நிலையில் தீனதயாளன் நண்பரின் வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்தை அவரை சிவ காளிதாசன் மற்றும் உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.
...