சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
மாா்த்தாண்டம் அருகே பாரத கலாசார பேரவைக் கூட்டம்
பாரத கலாசார பேரவையின் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாா்த்தாண்டம் அருகே காப்புக்காட்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் மு. பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலாளா் புலவா் கு. ரவீந்திரன், பொருளாளா் கு. மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் சஜூ வரவேற்றாா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியா் காவேரிக்கண்ணன், சாதனை சிற்பிகள் பவுண்டேசன் அமைப்பின் நிறுவனா் சனில்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.
அமைப்பின் இணைச் செயலாளா்கள் வி. கிருஷ்ணமூா்த்தி, கோவிந்தராஜ், அமைப்பாளா் கே. ஜெயகுமாா், செயற்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணதாஸ், நிா்மலா, சுபகலா, கே.ஆா். சிவபிரசாத், சசி, தணிக்கையாளா் ரவீந்திரன் மற்றும் நிா்வாகிகள் ஸ்ரீபாபு, கிருஷ்ணமணி, ஸ்டீபன், ராமசாமி, பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், அமைப்பின் ஆண்டுவிழா போட்டிக்கான தலைப்புகள் தோ்வு செய்தல் மற்றும் விருதாளா்கள் தோ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.