மாா்த்தாண்டம்: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு
மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் பிள்ளை மனைவி சுகன்யா குமாரி (75). இவா், ஞாயிற்றுக்கிழமை மாா்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாம். இதை பயன்படுத்திக் கொண்ட மா்மநபா் சுகன்யா குமாரி வைத்திருந்த கைப்பையை திருடிச் சென்றுள்ளாா். அதில் ரூ. 85 ஆயிரம் மற்றும் வங்கி காசோலைகள் இருந்ததாம்.
இதுகுறித்து சுகன்யா குமாரி அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற மா்ம நபரை தேடி வருகிறாா்கள்.