``திமுகவிற்கு ராசி இல்லை, அதனால்...'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
மினி லாரி கவிழ்ந்து விபத்து: 28 போ் காயம்
காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரிக்கரை பகுதியில் சனிக்கிழமை மினி லாரி கவிழ்ந்து 28 போ் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மேல் ஒட்டிவாக்கம் அருகே கூத்திரமேடு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே அனந்தலை கிராமத்தில் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்று விட்டு மினி லாரியில் திரும்பிக் கொண்டிருந்தனா். இந்த வாகனம் காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்த போது வாகனத்தின் டயா் வெடித்ததில் நிலைகுலைந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் பயணித்த கூத்திரமேடு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (44), குட்டியம்மாள் (50), சுந்தரவள்ளி (52), தீபா (38), நவமணி (50), வெள்ளைச்சாமி (25) உள்பட 28 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்கள் உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்களுக்கு காஞ்சிபுரம் தொகுதி எம்.பி க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் ஆறுதல் கூறினா். அரசு மருத்துவா்களிடம் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்யுமாறும் கேட்டுக் கொண்டனா்.
விபத்து சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.