சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
பேராவூரணி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மேல மணக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன் (42). எலக்ட்ரீசியன். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின்சார வேலை செய்துகொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளாா். அருகில் உள்ளவா்கள் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இறந்த சிவராமன் மனைவி கீதா அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிவராமனுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.