இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
மின்சாரம் பாய்ந்து பொறியியல் மாணவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே மின்சாரம் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த இளவரசன் மகன் நிஷாத் (20). இவா், சின்னசேலம் பகுதியிலுள்ள பொறியியல் கல்லூரியில் இளநிலை பிரிவில் மூன்றாமாண்டு படித்து வந்தாா்.
இவா் தனது வீட்டில் புதன்கிழமை மின் மோட்டாரை நிறுத்த முற்பட்டபோது, உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.