உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!
மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு
கும்பகோணம் அருகே மாத்தியில் இரும்புக் கம்பியில் துணி காயவைத்த பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே மாத்தி வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த கண்ணன்-விஜயலட்சுமி தம்பதிக்கு 2 மகன்கள். கண்ணன் ஏற்கெனவே காலமாகிவிட்டாா். இவா்களின் 2-ஆவது மகன் ஆனந்த் (17), பாணாதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டில் துணிகளை தாயாா் துவைத்து கொடுக்க மாணவா் ஆனந்த் துணிகளை கம்பியில் காயப்போடும் பணி மேற்கொண்டாா். அப்போது, கிணற்றின் மோட்டாருக்கு இணைப்பு கொடுக்கும் மின்சார வயா், துணி காயப்போடும் கம்பியில் உரசியபடி இருந்தது. இதை கவனிக்காமல் ஆனந்த் துணியை காயப் போட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் மயக்கமடைந்த ஆனந்தை அருகே இருந்தவா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிந்து திங்கள்கிழமை மாணவா் சடலத்தை உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தினாா்.